பெரியார் நடத்திய இயக்கம் என்பது அடிப்படையில் ஒரு அறிவுப் புரட்சி இயக்கம். தன்னுடைய 94 வயதுவரை ஓய்வின்றி, மக்களை சந்தித்துப் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தார் தந்தை பெரியார். மக்களிடையே நடைமுறையில் இருக்கும் பழக்க வழக்கங்களையும், சடங்குகளையும், சாஸ்திரங்களையும், வேதங்களையும் கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். 1920களிலேயே, ஈரோடு போன்ற சிறு நகரத்தில், சொந்தமாக அச்சகத்தை நிறுவி, குடியரசு என்கிற வார இதழையும், பதிப்பகத்தையும் நடத்திய அவர், பல்வேறு முற்போக்கு சிந்தனைகளையும், புரட்சிகரக் கருத்துகளையும் எழுதியும் பதிப்பித்தும் வந்தார்.
பெரியாரின் எழுத்துகள், பெரியாரிய பற்றாளர்களின் எழுத்துக்கள், பெரியார் பதிப்பித்த நூல்கள், பெரியாரிய இயக்கங்கள் வெளியிட்ட நூல்கள், பெரியாரியலுக்கு ஆதரவான தோழமை சக்திகளின் நூல்கள் ஆகியவற்றைப் பற்றி ஒரு தகவல் களஞ்சியமாகச் செயல்படுவதும், அவற்றில் தற்போது பதிப்பில் இருக்கும் நூல்கள் அனைத்தையும் ஒரே தளத்தில் வாங்குவதற்கான விற்பனைத் தளமாக செயல்படுவதும், இந்த மின் அங்காடியின் முதன்மையான நோக்கங்கள் ஆகும்!
நீங்கள் பதிப்பாளர் அல்லது எழுத்தாளர் எனில், பெரியாரியல் மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த உங்களது படைப்புகளை எங்களது இணைய தளத்தில் விற்பனைக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்.
மின்னஞ்சல்: "periyarbooks.in/[@]/gmail/[.]/com"
கைப்பேசி: 98845 44321
New No 4, Old No 20, Selvaranga Raja Street, Little Mount, Saidapet, Chennai - 600015
Periyar Books.in