Skip to product information
1 of 2

பாரதி புத்தகாலயம்

அரசு ( பாரதி புத்தகாலயம் )

அரசு ( பாரதி புத்தகாலயம் )

Regular price Rs. 30.00
Regular price Sale price Rs. 30.00
Sale Sold out
Shipping calculated at checkout.

அரசு என்பது என்ன?அது எவ்வாறு தோன்றியது?முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பற்றிக் கொள்ளவேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது?என்கிற கேள்விகளுக்கு விடையாக1919இல் தோழர் லெனின் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமே இப்புத்தகம்.முதலாளித்துவ அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,தத்துவ ஞானிகளால் மிக அதிகமாகக் குழப்பிவிடப்பட்ட பிரச்சனையான அரசு பற்றி வரலாற்றுப் பூர்வமாக லெனின் விளக்குகிறார்.வன்முறைகளைப் பயன்படுத்தும்-வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரமான அரசு ஆதிகால இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்ததில்லை.அப்பொதெல்லாம் பொதுத் தொடர்புகள்,சமுதாயக் கட்டுப்பாடு,வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாமே பழக்க வழக்கம் மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ,குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப்பட்டன.சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட பிறகே அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரமாக உருவாகிறது.சுரண்டலுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் போது,நில உடமையாளரும் ஆலை முதலாளிகளும் எங்குமே இல்லை என்னும்போது சிலர் வாரி வாரி விழுங்க மற்றவர் பட¢டினி கிடக்கும் நிலை நீடித்திராத பொது,இதற்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்னும் நாளில்தான் அந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம்.இதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என முடியும் புத்தகம்

View full details