Skip to product information
1 of 2

அடையாளம்

பாணர் இனவரைவியல்

பாணர் இனவரைவியல்

Regular price Rs. 220.00
Regular price Sale price Rs. 220.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பாணர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்க காலம்தான். அங்கே அவர்கள் வீரயுகப் பாடல்களைப் பாடியும் கலைகள் பல நிகழ்த்தியும் பரிசில் பெற்றார்கள்.

சமகாலத்தில் அவர்கள் எவ்வாறு அலைகுடிகளாகவும் மிதவைச் சமூகங்களாகவும் பரிணாமம் பெற்று நாடோடிகளானர்கள் எனும் கதையை விவரிக்கிறது இந்நூல். இதை வரலாற்றினூடாக வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமிடையே குறுக்கும் நெடுக்குமாக நடப்பதன் மூலம் பாணர்களின் பண்பாடு குறித்து பக்தவத்சல பாரதி ஓரு மானிடவியல் தொடர்ச்சியை முன்னெடுக்கிறார்.

இதன்மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட நாடோடிகளின் வாழ்வைப்புரிந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பை வழங்குகிறது இந்நூல். அத்துடன் நம்முடைய இருப்பையும் தொன்மையையும் இணைத்துப் பார்க்கும் விதமாக ஈர்ப்புமிக்க கழைக்கூத்தாடி, பூம்பூம் மாட்டுக்காரர், ஜாமக்கோடங்கி உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடோடிகளின் அசைவியக்கங்கள் குறித்துப் புதிய வெளிச்சத்தையும் அளிக்கிறது. இதனால் இந்நூல் தனது வகைமையில் முதலிடத்தைப் பெற்றுக்கொள்கிறது. தமிழ்ச் சமூக உருவாக்கம் பற்றிய தேடுதலில் அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

 

View full details