அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/annal-ambedkar-mathasarbattra-indiak-kudiyarasin-thandai 
பதிப்புரை

இந்தியத் துணைக்கண்டம் ஒரு காலத்தில் பல்வேறு தேசங்களாகப் பிளவுண்டு கிடந்தது. ஆனாலும் அந்தப் பிள வுண்டு கிடந்த தேசங்களில் எல்லாம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை நிலவி வந்தது. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் அந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் வடிவமாக, அதுவும் நீடித்து நிலைத்த தனிவகைப்பட்ட வடிவமாகச் சாதிய அமைப்பு முறை நிலவியது. எத்தனையோ வகைப் பட்ட மன்னர்களின் ஆளுகையில் கீழ் உள்ள தனித்தனி அரசுகளாக அவை தோன்றினாலும், வருண, சாதிய அமைப்பு முறை அவற்றை ஒரே விதமாக ஊடறுத்துச் சென்றது. அது பின்னால் இந்து அமைப்பு முறை எனப் பெயர் பெற்றது.

மதத்துக்குள் மனித சமத்துவத்தை வலியுறுத்தும், இஸ் லாமிய, கிறித்தவ மதங்களின் வருகை கூட, உடைமை வர்க்கத்தின் தேவையாக இருந்த இந்த நீண்ட நெடுங்காலச் சாதிய அமைப்பு முறையின் ஆணிவேர்களை அசைக்க முடியவில்லை.

பிரிட்டிஷ் மூலதன வருகை, இந்திய நிலப்பரப்பில் புதிய வகைப்பட்ட முதலாளித்துவ அரசமைப்பின் ஆரம்பத் தோற்றங்களை உருவாக்கியது. அது தன் தேவையின் பொருட்டு இந்தியச் சமூகத்தில் முதன் முதலாக நவீன வாழ் வின் சலனங்களை உருவாக்கியது.

மத வகைப்பட்ட சாதிய அமைப்பு முறையின் அழுத் தங்களுக்குள் பல்வேறு வகைகளில் அடக்கப்பட்டுக் கிடந்த பல்வேறு மக்கள் தொகுதியினரின் மேலெழும் உரிமைகளுக் கான வெளியை இந்த நவீனச் சூழல் திறந்து வைத்தது.

கல்வி, புதிய வகை நிர்வாகம், அதுவரையில் நிலவி வந்த பிறப்பினடிப்படையிலான பேதங்களை மறுதலிக்கிற சட்டபூர்வ முறைகள் போன்ற ஆரம்ப கட்ட முதலாளித்துவ அரசின் இயல்பான குணங்களாலாகிய நவீனம், இந்திய சமூகப் பரப்புக்குள் விதவிதமான நவீன அலைகளை எழுப்பியது.

வெளிநாட்டில் சென்று நவீனக் கல்வியைக் கற்கும் நல் வாய்ப்பை பாபா சாகேப் அம்பேத்கர் போன்ற சாதிய அடுக் கின் அடித்தட்டில் நசுக்குண்டு கிடந்த சில மனிதர்களுக்கும் வழங்கியது.

ஆனால் அம்பேத்கர் அந்த நல் வாய்ப்பை, ஒடுக்கப் பட்ட கால கால அழுத்தங்களின் வெறியோடு பயன்படுத்தினார். கற்றறிந்த மேதையானார்.

இறுதியில் இந்த மாபெரும் தேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளை வழங்கும் அரசியல் சட்டத்தை எழுதுகிற பெரும் பேற்றைப் பெற்றார்.

"அண்ணல் அம்பேத்கர் - மதச்சார்பற்ற இந்தியக் குடி யரசின் தந்தை” என்ற இந்நூலானது டாக்டர் முகமது யூசுப் இர்ஃபான் என்கிற லாகூரைச் சேர்ந்த மிகச் சிறந்த கல்வி யாளரால், ஆய்வறிஞரால் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஆய்வுரையாகும்.

லாகூரிலுள்ள கங்காராம் பவுண்டேசன் இதனை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி யாற்றி ஓய்வு பெற்ற, பல்வேறு கவிதை, சிறுகதை, நாவல் களின் ஆசிரியருமான பேராசிரியர் முனைவர் கோவத சுவாமி நாதன் அவர்கள் இதனை அழகுறத் தமிழாக்கம் செய்துள்ளார்.

தமிழ் கூறு நல்லுலகம் இந்திய அரசியலின் பல் வேறு பட்ட வரலாற்றுத் தன்மைகளை வேறுபட்ட கண்ணோட் டத்தில் விளங்கிக் கொள்வதற்கு இந்நூல் மிகுந்த உதவி செய்கிறது.

மிக விரிவான, அறிவறிஞர்களின் மேற்கோள்கள், அரிய வரலாற்றுத் தரவுகள், தர்க்கவியல் முறைகள் என்று இந்நூல் ஒரு செறிவான அறிவுச் சொல்லாடலையும், வரலாற்று முறை யியலையும் முன்வைக்கிறது.

இந்திய அரசியலின் பல்வேறு போக்குகளுக்கான வர லாற்று மூலங்கள் பலவற்றையும் இந்நூல் மிகக் காத்திரமான வகையில் முன்வைக்கிறது.

மேலும் சிறந்த விவாதத்துக்கான புள்ளிகள் பலவற்றை யும், களங்கள் பலவற்றையும் இது அறிவுலகின் முன், வர லாற்று உலகின் முன் திறந்து வைக்கிறது.

இந்நூலினை வியாபார நோக்கில் வெளியிடவில்லை. இந்த நூலின் அச்சாக்கம் மற்றும் மொழி பெயர்ப்பு வகைப் பட்ட செலவினங்களுக்கான அறிவார்ந்த வாசகரின் கொடையையே எதிர் பார்க்கிறோம்.

அறிவார்ந்த விவாதங்களை உருவாக்கும் ஒற்றை நோக் கத்தோடு மட்டுமே இந்நூல் வெளியிடப்படுகிறது.

வரலாற்றை மேலும் மேலும் கற்பதற்கும், அதன் மூலம் இந்திய சமூகத்தை மேலும் மேலும் ஜனநாயகப் படுத்துவதற் கும், மக்களிடையே எல்லாவகையிலும் சமத்துவம் நிலவு கின்ற ஓர் உலகை நோக்கிய பயணத்தில் இது உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும், காலம் வெளியீட்டின் சார்பாக இந்நூலை வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறேன்.

 

காலம் வெளியீட்டிற்காக

ஸ்ரீரசா

14.03.2019

மதுரை

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog