ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - ஆசிரியரைப் பற்றி…

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/asivagamum-aiyannar-varalarum 
ஆசிரியரைப் பற்றி…

பேராசிரியர் க.நெடுஞ்செழியன்

நல்ல கவிஞர், சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த ஆய்வாளர் தமிழ் இன - மொழி பண்பாட்டு மேன்மையை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர்.

கவிதை, சொற்பொழிவு - ஆய்வு என மூன்று துறைகளிலும் பொற்பதக்கங்களையும், பொற்கிழிகளையும் பரிசாகப் பெற்றவர்.

எழுதிய நூல்கள் 17. பதிப்பித்தவை 6. இன்னும் வர இருப்பவை பல. தமிழக அரசின் முதல் பரிசையும், பிற நிறுவனங்களின் பரிசுகளையும் இவரின் நூல்கள் பெற்றுள்ளன.

இராசபாளையம் பெரியார் மையம் ‘பெரியாரியல் சிந்தனையாளர்' எனும் விருதையும், திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி தமிழின அடையாள மீட்பர்” எனும் விருதினையும், கற்ப அவிழ்தம் மருத்துவ இதழின் ஆசிரியர் குழு 'தமிழ் மெய்யியல் மீட்பர்' எனும் விருதினையும், இந்திய மருத்துவக்கழகத் திருச்சிராப்பள்ளி கிளை 'சிறந்த தமிழறிஞர் விருதினையும் வழங்கி இவரைச் சிறப்பித்துள்ளன.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசப் புகழொளி எனும் உயரிய விருதினை வழங்கி, 'தமிழ்த் தேசத்தின் புகழையும் தமிழ்த் தேசத்தில் தமது புகழையும் நிலை நிறுத்தியுள்ள பேராசிரியர் எனப் பாராட்டி மகிழ்ந்தது.

உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் எனும் ஆய்வு மையத்தை நிறுவி, தமிழாய்வுப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றார். தமிழினம் தலைநிமிரவும் தன்னம்பிக்கை கொள்ளவும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஓர் உந்து விசையாகப் பாடாற்றி வருகிறார்.

Back to blog