திராவிட இயக்க வரலாறு - பாகம் 1 - முன்னுரை

தலைப்பு

திராவிட இயக்க வரலாறு - பாகம் 1

எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார்
பதிப்பாளர்

கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள் 342
பதிப்பு முதற் பதிப்பு - 2010
அட்டை காகித அட்டை
விலை Rs.450/-

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://www.periyarbooks.in/dravida-iyakka-varalaaru-part-1.html

முன்னுரை

திராவிட இயக்க வரலாறு என்பது ஒரு வகையில் தமிழகத்தின் கடந்த நூறாண்டுகால அரசியல் வரலாறு.

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது.

பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்து கொண்டது.

ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கி, தமிழ்ச்சமூகத்தை ஆளும் மாபெரும் அரசியல் சக்தியாக திமுகவை அண்ணா வளர்த்தெடுத்ததன் பின்னணியில்தான் எத்தனைப் போராட்டங்கள். தியாகங்கள்!

திராவிட இயக்கத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவான 1909 தொடங்கி அண்ணா மறைந்த 1969 வரையிலான அரசியலும் சரித்திரமும் புத்தகத்தின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

நூலாசிரியர் ஆர். முத்துக்குமார், பெரியார், எம்.ஜி.ஆர், அம்பேத்கர், இந்திரா காந்தி, ஜீவா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை முன்னதாக எழுதியுள்ளார். தமிழக, இந்திய அரசியல் களத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.