இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பதிப்புரை - 1

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai 

பதிப்புரை - 1

பிரேம்நாத் பசாஸ் எழுதிய இந்திய வரலாற்றில் பகவத் கீதை' என்ற இந்த நூல் The Role of Bhagavad Gita in Indian History என்ற நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு ஆகும்.

1975 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டில் தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகிறது. இந்நாள் வரையில், பகவத் கீதையையும் இந்து மதத்தையும் இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் விமர்சிக்கின்ற நூல் இது ஒன்றுதான் என்பது இந்தியவியலாளர்களின் ஒருமித்த கருத்து.

ஆங்கில மூலத்தின் வாக்கிய அமைப்பை முதன்மையாகக் கொள்ளாமல், அதன் பொருளை முதன்மையாகக் கொண்டு, தமிழில் வாக்கியங்கள் அமையும் விதத்தை மனத்திற்கொண்டு செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கம் என்ற வகையில் இது ஒரு புது முயற்சி.

ஆங்கில மொழி, ஆங்கிலேயப் பண்பாடு, மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகள், சோவியத் யூனியன், லெனின், ஸ்டாலின் குறித்து பசாஸ் முன்வைக்கும் மதிப்பீடுகள், செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. மேலோட்டமானவை. இந்துமத ஆதிக்கம், சாதியம் குறித்துக் கடுமையாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஆளுமைக்கு உட்பட்டே இந்து மதமும் சாதியமும் இயங்குகின்றன என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த விமர்சனம் பசாஸ் முன்வைக்கும் கருத்துகளுக்கும் பொருந்தும். நவீனத்துவம், நவீன அறிவியல் குறித்த கருத்துகள் இன்று மாறியிருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்நூலின் ஆங்கில மூலப்படியைத் தந்துதவிய "இண்டியன் ஸ்கெப்டிக்" ஆசிரியர் திரு. பிரேமானந்த் அவர்களுக்கும், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி வழங்கிய பிரேம்நாத் பசாஸின் துணைவியார் திருமதி. கௌரி பசாஸ் அவர்களுக்கும், முகப்போவியம் வழங்கிய எரன் ங் {Erin ng) அவர்களுக்கும் நன்றி.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog