பெரியார் : ஆகஸ்ட் 15 - ஆசிரியர் குறிப்பு

பெரியார் : ஆகஸ்ட் 15 - ஆசிரியர் குறிப்பு

தலைப்பு

பெரியார் : ஆகஸ்ட் 15

எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
பதிப்பாளர்

விடியல்

பக்கங்கள் 701
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2006
அட்டை தடிமனான அட்டை
விலை Rs.450/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-august-15.html

 

ஆசிரியர் குறிப்பு

'எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம்' என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட - மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை; இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சித் தலைமை பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பன - பனியா நலன்கள்; இரண்டாம் உலகப் போரையும் பாசிசத்தையும் காங்கிரஸ் தலைமை, சுபாஸ் சந்திரபோஸ், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, அம்பேத்கர், பெரியார், எம்.என்.ராய் ஆகியோர் எதிர்கொண்ட முறைகள்; 'வெள்ளையனே வெளியேறு' (ஆகஸ்ட்) போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் நடத்திய அரசியல் சூதாட்டம்; இந்தியா பாகிஸ்தான் பிரிவினையிலும் வங்காளம், பஞ்சாப் ஆகியவற்றைத் துண்டாடு வதிலும் வட இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் வகித்த தீர்மானகரமான பாத்திரம்;- பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பன முக்கூட்டு ஒப்பந்தத்தால் விளைந்த '1947 ஆகஸ்ட் 15'. அதிகாரமாற்றம்; மாநிலங்களின் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமைகள் ஒடுக்கப்பட்டமை; இந்திய தேசியம், தேச அரசு ஆகியவற்றில் உள்ளார்ந்த பார்ப்பனிய இந்துத்துவம் ஆகியன இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. பெரியார் இயக்கத்திற்கும் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்கும் இடையே இருந்த உறவுகள் - முரண் பாடுகள், பெரியார் - அம்பேத்கர் உறவு ஆகியனவும் இந்நூலில் விளக்கப் படுகின்றன. பெரியாரின் திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை தமிழ் - திராவிட முதலாளிகளின், பணக்கார வர்க்கத்தின் தூண்டுதலால் எழுப்பப் பட்டது என்று கம்யூனிஸ்ட்'டுகள் கூறிவந்த கருத்து வலுவான சான்றாதாரங் களுடன் தகர்த்தெறியப்பட்டுள்ளது. 1939 முதல் 1953 ஆம் ஆண்டு வரை யிலான பெரியார் இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நூல் தமிழகத்தில் பனியா-பார்ப்பனச் சக்திகள் 'நவகாளி'களை உருவாக்குவார்கள் என்பதைப் பெரியார் 1947-இல் தொலைநோக்குப் பார்வையுடன் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறது.

பெரியாரின் - பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் இந்திய விடுதலை இயக்கத்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறவர் களுக்கு இன்றியமையாததொரு நூல் இது.

Back to blog