தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - பதிப்புரை

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - பதிப்புரை

தலைப்பு

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

எழுத்தாளர் ரவி வைத்தீஸ்வரன்,ரா. ஸ்தானிஸ்லாஸ்
பதிப்பாளர் மேன்மை வெளியீட்டகம்
பக்கங்கள் 336
பதிப்பு முதற் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை
விலை Rs.250/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/thamiz-samoogaththil-samayam-saathi-kotpaadu.html

பதிப்புரை

இந்திய வரலாறு என்பது சமயங்களின் வரலாறாகவே இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுவர். காலனிய ஆட்சியின் போது நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற நாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி கட்டமைக்கப்பட்ட நாட்டின் சமூகம் என்பது மதத்தின் சமூகமாகவே உள்ளது.

மதம் சார்ந்த அடையாளங்கள், கலாசாரம், பண்பாடு ஆகியவை அன்றிலிருந்து இன்றைக்கு வரை மனிதர்கள் வாழுகின்ற வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ளன. அவை அவ்வப்போது புதிய அவதாரங்களையும் எடுத்துள்ளன. இந்த நிகழ்வுகளையும் வரலாற்றையும் எப்படி புரிந்துக் கொள்வது என்ற வினா எமவ இயற்கையே. இதை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தும் அல்லது அனைத்து மதம் சார்ந்தும் அல்லது மதத்தை முற்றாக புறந்தள்ளியும் அல்லது கால வளர்ச்சிக்கு ஏற்ப கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக என்னனென்ன மாற்றங்கள் அடைந்துள்ளன என்று அறியும் போது மதங்கள் காலந்தோறும் எப்படி தம்மை தகவமைத்து கொள்ளுகின்றன என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

காலந்தோறும் தகவமைத்துக் கொண்டு, தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் மதத்தை இந்திய சமூக வரலாற்றில் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. ஆனால் இன்று சமயம் என்ற பாடத்துறையோ அல்லது ஆராய்ச்சித் துறையோ தமிழ்நாடு மற்றும் இந்திய உயர்கல்வி பீடங்களில் இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாக இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த புத்திஜீவிகளின் விவாதங்களை இந்நூல் முன்வைக்கிறது.

இதுபோன்ற விவாதங்கள் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும், செழுமைப்பெற வேண்டும் என்ற நோக்கில் மேன்மை வெளியீடு சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளிவருகிறது. இந்நூலை பதிப்பிக்க அனுமதியளித்த ரவி வைத்தீஸ்வரன், ரா.ஸ்தனிஸ்லாஸ் ஆகியோருக்கு நன்றி. இந்நூலை வாசகர்கள் வரவேற்று விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

- பதிப்பகத்தார் 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - முன்னுரை

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - பொருளடக்கம்

Back to blog