பௌத்தத் தத்துவ இயல் - பதிப்புரை

தலைப்பு

பௌத்தத் தத்துவ இயல்

எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயன்
பதிப்பாளர்

நியூ சென்சுரி புக் ஹவுஸ்

பக்கங்கள் 194
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை
விலை Rs.165/-

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://www.periyarbooks.in/boutha-thathuva-iyal.html

பதிப்புரை

ராகுல் சாங்கிருத்யாயன் இந்தியத் தத்துவச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். அவரது எழுத்துகள் எழுதப்பட்ட காலகட்டங்களில் மேலதிக கவனத்தைப் பெற்றதோடு இன்றளவும் பல ஆய்வுகள் மேற்கொள்வதற்கான வாயில்களைத் திறந்துவைப்பதாக உள்ளன.

மார்க்சியத்தில் ஆழ்ந்த பற்றுகொண்டிருந்த ராகுல்ஜி, மனித இனம், மனித சமூகம், உலக வரலாறு, தத்துவங்கள், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களை தனது வாழ்நாளில் எழுதிக்குவித்தவர்.

'பௌத்தத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் புத்தரின் வாழ்க்கை, அவரது அடிப்படைத் தத்துவங்கள், பௌத்த மதப் பிரிவுகள், பௌத்த மதத்தின் உயர்மட்ட வளர்ச்சி ஆகியவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இவற்றோடு பின்னிணைப்பாக ராகுல்ஜியின் தேர்வுக் கட்டுரைகளான, புத்தர் காலத்திற்கு முற்காலத் தத்துவ மேதைகள் மற்றும் பிற்கால தத்துவ ஞானிகளைப் பற்றியும் ராகுல்ஜி எழுதிய தனித்தனியான கட்டுரைகளுடன் 'வஜ்ராயனத்தின் தோற்றமும் எண்பத்தி நான்கு சித்தர் கணமும்' என்ற விரிவான கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளன.

'தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமைபெற்று விளங்கிய ஏ.ஜி.எத்திராஜுலு அவர்கள் வாசகர்களுக்கு 'எளியமுறையில் இந்நூலை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த் துள்ளார். இந்நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள கட்டுரைகள் மட்டும் பௌத்த சிந்தனைகள்' என்னும் பகுப்பில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஆர்.பி.எஸ் என்றழைக்கப்பட்ட ஆர்.பார்த்தசாரதி அவர்கள். இருவரது வளமான மொழிபெயர்ப்பு களும் இந்நூலுக்கு மேலும் அணி செய்கின்றன. - இந்நூலின் முதற்பதிப்பு என்சிபிஎச் வெளியீடாக 1985ம் ஆண்டு வெளியானது. 2003ம் ஆண்டில் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. உலகளவிலான தத்துவ வறட்சியும் தேக்கமும் ஏற்பட்டுள்ள இக்கால நிலையில் புதிய வடிவமைப்பில் தற்போது மீள்பதிப்பு செய்யப்படுவது அவசியமெனக் கருதுகிறோம்.

- பதிப்பகத்தார்

தொடர்புடைய மற்ற பதிவுகள்: