புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை) - வே.ஆனைமுத்துவின் பாராட்டுரை

புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை) - வே.ஆனைமுத்துவின் பாராட்டுரை

தலைப்பு

புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை)

எழுத்தாளர் குத்தூசி குருசாமி|அ.பென்னம்பலனார்|க.இராமகிருஷ்ணன்
பதிப்பாளர்

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்

பக்கங்கள் 2528
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை காகித அட்டை
விலை Rs.1,200/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/puthuvai-murasu-collections.html

 

வே.ஆனைமுத்துவின் பாராட்டுரை

புதுவை தேங்காய்த் திட்டுக்கு 1956 முதல் சென்றுவரும் நான், 2007இல், என் துணைவியார் ஆ.சுசீலாவின் பாட்டனார் ஆனையப்ப நாயகர் வாழ்ந்த வீட்டைத் தேடித் தேங்காய்த் திட்டுக்குப் போனேன். என்னை அடையாளங்கண்ட அறிஞர் க. இராமகிருஷ்ணனின் மகன் அவருடைய இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தம் தந்தையாரின் பெரிய உருவப் படத்தைக் காட்டி, அவரே "புதுவை முரசு" இதழின் முதலாவது ஆசிரியர் என்பதை மகிழ்ச்சியுடன் கூறினார்.

அவரை அடுத்து, அன்று தன்மானக் கொள்கை குன்றாக விளங்கிய சா.குருசாமி, ஓடும் தொடர்வண்டி தடதட வென ஓசை எழுப்புவது போல மடமட வென் மேடையில் கொட்டும் போட் மெயில் பொன்னம்பலனார் ஆகியோர் ''புதுவை முரசு" இதழின் ஆசிரியர்களாக விளங்கினர். இவர்களும், புதுவை கண்ட செயல்வீரர்கள் நோயல், கவிஞர் சிவப்பிரகாசம், முதலான பெருமக்களும் அன்று, சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பிட ஆற்றிய தொண்டினைப் பற்றி என்றும் தமிழுலகம் அறிய ஏற்ற சீரிய பணியை, வாலாசா வல்லவன் பொறுப்புடன் செய்து முடித்துள்ளது. மிகப்பெரிய தொண்டாகும். இவருடைய இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என விழைகிறேன்.

 

1-12-2009                                                                                                                                              வே. ஆனைமுத்து

Back to blog