0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம்

Quick Overview

Dravida Iyakkam - Nokkam Thakkam Thekkam, Govi.Lenin
எழுத்தாளர்: G.லெனின்
பதிப்பாளர்: நக்கீரன் வெளியீடு
எடை: 0.315 kg
₹200.00

Availability: In stock

Only 3 left

Details

திராவிட இயக்கம், ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்த மண்ணில் வேரூன்றியுள்ள இயக்கம். இதைப்போல வேகமான வளர்ச்சியைக் கண்ட இயக்கமும் இல்லை. கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிற இயக்கமும் இல்லை. ஏனெனில், இயக்கத்தின் தாக்கம் அப்படிப்பட்டது.

திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட பிறகு, அதனை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பதே நோக்கம் என்றிருந்தவர்கள் இணைந்திருக்கிறார்கள். திராவிடம் என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். திராவிட இயக்கம்தான் தங்கள் வாழ்வை உயர்த்தியது என்பதில் உறுதிகொண்ட தலைமுறையினரும் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சொல்லாகவும் சக்தியாகவும் விளங்கும் திராவிடம் ஏன் தோன்றியது? எதை முன்னிறுத்தி வளர்ந்தது? யாருக்காக பாடுபட்டது? இன்று பயணிக்கும் பாதை எது? அதன் எதிர்காலம் என்பது எப்படிப்பட்டது?

கேள்விகள் குவிந்திருக்கின்றன.

விடைகள்?

வரும் பக்கங்களில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றலாம். அல்லது உங்களது எதிர்பார்ப்பின் அடிப்படையிலானத் தேடலுக்கு இந்தப் பக்கங்கள் துணையாக வரலாம்.

ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்' என்று சொல்லுவார்கள், அதைப்போல திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளை நூலாசிரியர் கோவி.லெனின் நிரம்ப எடுத்து விவரித்துக் கூறியிருக்கிறார். நீதிக்கட்சி காலத்திலிருந்து தி.மு.க. காலம் வரை அ.இ.அ.தி.மு.க.வை உள்ளடக்கி இத்திராவிடக் கட்சிகளின் சாதனைகளை காய்தல் உவத்தலின்றி ஆசிரியர் விளக்கிச் சொல்லுகிறார். இது மட்டுமன்றி இக்கட்சிகளின் உள்ளும் புறமுமான பல செய்திகளைச் சுருக்கமாகக் கூறியிருப்பது ஆசிரியர் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது, இந்நூல் ஆசிரியர் திராவிடர் இயக்கம் பற்றிய வரலாற்று நூலை எழுத முற்றிலும் தகுதியுடைய ஒருவரே என்பதில் துளியும் அய்யமில்லை .

-க.திருநாவுக்கரசு
திராவிட இயக்க இயலாலார்

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம்

திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம் - அணிந்துரை

திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம் - பாதை

Additional Information

தலைப்பு Dravida Iyakkam - Nokkam Thakkam Thekkam, Govi.Lenin
எழுத்தாளர் G.லெனின்
பதிப்பாளர் நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் 328
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price