புராண, இதிகாசங்களை நாட்டில் வெகுவாகப் பரப்பியதன் மூலமே, மக்களின் மூளைக்கு விலங்கிட்டனர் - பண்பாட்டுப் படையெடுப்பாளர்களான ஆரியர்கள்.
பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள்தான் சனாதனத்தின் மூலதனம் ஆகும்.
அந்த வரிசையில் வேறு எந்த நூலையும் விட அதிகமான பிரச்சார வசதி பெற்று, மிகப்பெரிய அளவில் மக்களிடையே உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்ட நூல் 'பகவத்கீதை'யாகும்.
மகா பாரதம் நடந்த கதையல்ல; அது ஒரு கற்பனைதான். பகவத்கீதை பற்றிய ஆய்வை நடத்தி, அதனுள் விரவியுள்ள ஆரிய வர்ணதர்ம பாதுகாப்புப் புரட்டினையும், பெண்களை இழிவுபடுத்தும் கொடுமைகளையும் ஆத்மா, கர்மா, பித்தலாட்டங்களையும் அம்பலப்படுத்திட "கீதையின் மறுபக்கம்' என்ற தலைப்பில் 1998இல் இந்நூல் முதல் பதிப்பாக வெளி வந்தது.
இந்த நூலை ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் படித்து முடித்து விட எண்ணாதீர்கள். ஒரு புதுமையை ஆய்வது போன்று, பொறுத்து, அசை போட்டுப் படித்துச் செரிமானம் செய்ய முயற்சியுங்கள்!
தொடர்புடைய பதிவுகள்:
கீதையின் மறுபக்கம் - ஓர் எளிய தொண்டனின் நன்றிப் பெருக்கு...!
கீதையின் மறுபக்கம் - இரண்டாம் பதிப்புரை
கீதையின் மறுபக்கம் - ஆறாம் பதிப்புக்கான பதிப்புரை
கீதையின் மறுபக்கம் - 22ஆம் பதிப்புக்கான பதிப்புரை
Short Description | Geethaiyin Marupakkam |
---|---|
Author | Ki.Veeramani |
Publisher | Dravidar Kazhagam |
Pages | 480 |
Edition | 27th Edition - 2019 |
Cover | Paperback |