இந்நூலில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்துவிரிந்த வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இறுதி அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 'ஐரோப்பாவில் தத்துவப்போர்' என்ற கட்டுரை அரிதானதும் மிகச் சிறப்பானதுமாகும். இஸ்லாம் மார்க்கத் தத்துவார்த்த சிந்தனைகளுடன் சேர்த்து அதில் நிலவிய மாறுபட்ட கருத்துப் போக்குகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்நூல் துணை நிற்கிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Islaamiya Thathuva Iyal, Rahul Sankrityayan |
---|---|
எழுத்தாளர் | ராகுல் சாங்கிருத்தியாயன் |
பதிப்பாளர் | New Century Book House |
பக்கங்கள் | 200 |
பதிப்பு | மூன்றாம் பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |