Skip to product information
1 of 2

அடையாளம்

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

Regular price Rs. 390.00
Regular price Sale price Rs. 390.00
Sale Sold out
Shipping calculated at checkout.

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

பயணக்கதை கேட்பது பழங்காலத்திருந்தே மனிதர்களுக்கு ஓர் ஆர்வமூட்டும் மரபாக இருந்துவருகிறது. நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூல் பண்டைய, இடைக்கால தென்னிந்திய வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் ஒரு முதன்மை ஆதாரம். இதில் இந்தியப் பகுதிக்கு வந்த மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவான் வரை பல வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் இடம்பெறுகின்றன.

நமக்குத் தெரியுமா? அரிசி ஒருவகையான சோளம், சீனர்கள் இந்தியாவை செண்டவ் என்று அழைத்தது, சிலோனில் வசிப்பவர்கள் இறந்தவர்கள்மீது நறுமணப் பொருள்களைப் பூசி பதப்படுத்திய விதம், கோமாரி இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு நாடு, பனங்கற்கண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேசிய பானம், ஏன் அங்கு சர்க்கரை உற்பத்தி செய்யும் மரங்கள்கூட இருக்கின்றன, பாம்புகள் நமது கண் கொள்ளாத அளவுக்குப் பெரிதாக இருக்கின்றன, வைரமும் வைடூரியமும் குவிந்துகிடக்கின்றன!

ஒவ்வொரு பயணியின் குறிப்புகளும் மூச்சுமுட்ட வைக்கின்றன. எட்டுக்கால் பூச்சி வீட்டிற்குள் எந்தத் திசைகளிலிருந்து நுழைவது வணிகர்களுக்கு நல்ல சகுனம், முத்துக்களின் சாம்பலைக்கொண்டு வெற்றிலை மெல்லும் அந்த சிலோன் ராஜா. பட்டியலுக்கும் விசித்திரங்களுக்கும் முடிவில்லை.

தென்னிந்தியாவைப் பற்றிய வெளிநாட்டினரின் இந்தக் கிளர்ச்சி யூட்டும் குறிப்புகள் நிச்சயமாக வாசிக்க வேண்டிய ஒன்று.

View full details