Skip to product information
1 of 2

ஆழி பதிப்பகம்

உனது பேரரசும் எனது மக்களும்

உனது பேரரசும் எனது மக்களும்

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out
Shipping calculated at checkout.

இந்தி-இந்து-இந்துஸ்தான் படையினர் இன்று இந்தியாவில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சித்தாந்த எதிரிகளில் முக்கியமானவர் கோர்கோ சாட்டர்ஜி. தன்னுடைய அனல்கக்கும் எழுத்துகளில், மறுக்கவே முடியாத வாதங்களினூடாக அவர் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோர்கோவுக்கு தமிழ்நாட்டிலும் வாசகர் பட்டாளம் உண்டு.
 
இந்தியா ஒரு நாடாக அல்லாமல்,பேரரசாக எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறார் கோர்கோ. இந்தியாவில் ஒன்றிய-மாநில அரசாங்கங்களின் உறவு, இந்தித் திணிப்பு, ஹிந்தியக் கலாச்சாரம், தில்லி-மைய பொருளாதாரம், தேசிய இனச்சிக்கல், வடகிழக்கு மாநிலங்களின் தனிச்சிறப்பான பிரச்சனைகள், வங்காள தேசிய இனத்தின் உணர்வுகள், ‘ஆங்கிலோ-இந்தி’ மேலாதிக்கம் போன்றவை குறித்து எழுதிய பல கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.
 
கோர்கோவுக்கு தமிழ்நாட்டோடு நட்பார்ந்த உறவு உண்டு. கோர்கோ சுட்டிக்காட்டும் தில்லிப் பேரரசு தமிழர்களுக்கு முன்பே அறிமுகமானதுதான். ஆனால் அதை எதிர்கொள்ள கோர்கோ முன்வைக்கும் ஆலோசனைகள் பல நமக்கு புதியது.

View full details