வெள்ளை மொழி என்பது அ. ரேவதி அவர்கள் எழுதிய தன்வரலாற்று நூல் ஆகும். திருநங்கையான இவர், தனது பாலமைவு அடையாளம் காரணமாக தான் சந்தித்த சிக்கல்களையும், தம்மைப் போன்றோர் சந்திக்கும் சிக்கல்களையும், வாழ்வியல் சமூக சூழலியல் விபரிப்புகளோடு பதிவுசெய்துள்ளார். இந்த நூல் ஆங்கிலத்தில் The Truth about Me: A Hijra Life Story என்று வ. கீதாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னடத்திலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "பாலியல் சமத்துவத்தை நோக்கிய செயலாக, பெண்ணிய உரையாடலின் அடுத்த கட்டமாக" இந்த நூல் கருதத்தக்கது என்று காலச்சுவடு மதிப்புரையில் கூறப்பட்டுள்ளது
நன்றி:https://ta.wikipedia.org/wiki/
தலைப்பு | Vellai Mozhi - Aravaniyin Thanvaralaaru, Revathy |
---|---|
எழுத்தாளர் | ரேவதி |
பதிப்பாளர் | அடையாளம் |
பக்கங்கள் | 271 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |