Skip to product information
1 of 2

பாரி நிலையம்

தி.மு.க வரலாறு (பாரி நிலையம்)

தி.மு.க வரலாறு (பாரி நிலையம்)

Regular price Rs. 450.00
Regular price Sale price Rs. 450.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
தென்னாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றி அறுபத்தி எட்டு ஆண்டுகளாகின்றன. 1916 ஆம் ஆண்டு தமிழரின் தனிப் பெரும் தலைவர் சர்.பி. தியாகராயர், டாக்டர் சி நடேச முதலியார், டி.எம்.நாயர் ஆகியவர்களால் தோற்றுவித்த திராவிடர் இயக்கம் காலத்தின் நிலைக்கேற்ப அவ்வப்போது பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருப்பினும் அதன் அடிப்படைக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது கிடையாது.

அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் ஆகியவைகளைக் அடிப்படையாகக் கொண்டு - இவ்வியக்கம் ஆற்றியுள்ள  தொண்டு - அளவிட்டுக் கூற இயலாது என்றே கூறலாம். தென்னாட்டு மக்கள் - சமுதாயத்தில் ஆரியனுக்கு அடிமையாய் - பொருளாதாரத்தில் வடவனுக்கு அடிபணிந்து அரசியலில் ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டிருந்த காலம் - திராவிட இயக்க ஆரம்ப காலம், நாட்டை ஆண்ட இனம் நாடற்று - நாதியற்று - வாழும் வகையற்று - நாடு பல சென்று -நல்வாழ்வு பெறாமலிருந்த காலம் அன்று.
 
இயக்கம் பற்பல காலங்களில் பற்பல ஆபத்துக்குள்ளாகி - சிக்கித் தவித்து அழிந்துவிடுமோ என்று அஞ்சிய நேரத்திலெல்லாம் பிழைத்துப் போராட்டங்கள் பல நடத்தி ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்ரே வந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக. 

ஆசிரியரைப் பற்றி :1940-60 ஆகிய இடைப்பட்ட ஆண்டுகளில் திராவிட இயக்கம் போற்ற எழுந்த சுயமரியாதை ஏடுகள் இருநூற்றுக்கும் மேற்பட்டவையாகும். அவற்றில் ஒன்றான தமிழ்உலகம் ஏட்டின் ஆசிரியர் டி.எம்.பார்த்தசாரதி.

திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘மாலைமணி’ நாளிதழ் தொடங்கப்பட்டது. டி.எம்.பார்த்த சாரதி (தி.மு.க. வரலாற்றை எழுதியவர்) தொடங்கிய அப்பத்திரிகை யின் ஆசிரியர் பொறுப்பை அண்ணா ஏற்றார்.
View full details